மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மத வழிபாட்டிடங்களில் மின்விளக்குகளை ஒளிரவிடாமல் இருக்க பிக்குகள் எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக, தேவாலயங்களிலும் மின் விளக்குகளை அணைக்குமாறு கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், தேவாலயங்களுக்கு அறிவித்துள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பௌத்த வழிபாட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்படும் போது தேவாலயங்களும் மின்விளக்குகள் அணைக்கப்படும் என கொழும்பு பேராயர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற் றும்போதே அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு கூறினார்.

அதிகரித்துள்ள மின் கட்டணத்தினால் மத ஸ்தலங்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதி கரிக்கப்பட்ட மின் கட்டணத்தினால் பொது மக்கள் மட்டுமின்றி மத வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்பட் டுள்ளதால் இந்த அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.