கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளைய தினம் மீண்டும் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என’றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை கலந்துரையாடப்படும் எனவும் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.