நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம், தொடர்ந்தும் முகக் கவசம் அணியுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டு மருத்துவ நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பொதுமக்களுக்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு கவலை அளித்துள்ளது.

மருத்துவமனை அமைப்புகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமா என்பது குறித்து எதுவும் அமைச்சினால் குறிப்பிடப்படவில்லை.