முச்சக்கர வண்டிகள் வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் பெற www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கே இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் அடுத்த வாரத்தில் இருந்து பதிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த இணையதளம் மேல்மாகாணத்திற்கு மட்டுமே பிற மாகாண சாரதிகள் பதிவு செய்ய முடியாது எனவும் அறிவித்துள்ளார்.