முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை

0
294

மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக குறித்த திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவுகளை ஏற்புடையதாக்கிக் கொள்ள, நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இணைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் போலவே, அதுதொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையொன்று கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here