மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

0
217

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பித்தார். இந்த வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த நவம்பர் 15ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற்றது.

22ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக 121பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இந்நிலையில், மூன்றாவது வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது.

இன்றுடன் இந்த விவாதங்கள் நிறைவடைகின்றது. இதனையடுத்து, மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here