மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து லிந்துலை மாணவி பலி

0
1118

தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் குதித்து மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவி லிந்துலை-மிளகுசேனை தோட்டத்தில் வசித்து வந்த 19 வயதுடைய  வீரையா ஜிலோஜினி என்பது தெரியவந்துள்ளது.

லிந்துலை-சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று வரும் குறித்த மாணவி, இன்று தலவாக்கலை பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல்  – குணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here