கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மின்னேரியா மற்றும் ஹிகுராக்கொட பகுதிக்கு இடையில் யானைகள் கூட்டம் எரிபொருள் ரயிலுடன் மோதி தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த மீனகயா புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கல் ஓயாவிலிருந்து திருகோணமலை வரை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில்களும், மஹவயில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு சரக்கு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இந்த எரிபொருள் ரயிலின் இன்ஜின், கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு எண்ணெய் தாங்கிகள் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.