தமிழ் அரசியல் கட்சிகளால் இன்று ஹர்த்ததாலுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்ததால் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையம் மற்றும் கடைத்தொகுதி என்பன வெறிச்சோடி காட்சியளித்தன.