யாழ்ப்பாணத்துக்கு, இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இன்று (24) வருகை தந்துள்ளார்.

யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ‘யாழ் கானம்’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.