யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கு நாளை முதல் ரயில்சேவை

0
315

கல்கிசையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கு   நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு இரவு நகர் சேர் கடுகதி  புகையிரதம்  ஒன்று சேவையில் ஈடுபட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில்  நிறுத்தப்பட்டு அம்பலங்கோட, பொல்காவலை, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து, அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில், சுன்னாகம், காங்கேசந்துறையை சென்றடையும்.

ஞாயிற்றுக் கிழமைகளில்  காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம், கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கொழும்பு, கம்ப ஹா, மருதானையை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையை சென்றடையவுள்ளது.ஒரு வழி கட்டணமாக நகர் சேர் கடுகதிக்குரிய கட்டணமாக 2,800 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் நீங்கள் மேற்கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here