யாழ்.- சென்னை இயங்கும் indigo விமான சேவை மீண்டும் ஆரம்பம்

0
52
சென்னை – யாழ் விமானசேவையை indigo நிறுவனம்  (01) முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இச் சேவையில் ATR 72-600s வகை விமானம் இயக்கப்படுகிறது. இது 78வரை ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானாமாகும்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டுத்தயாரிப்பான இவ் விமானங்கள் சுமார் 1,200க்கும் அதிகமாக தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.
பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் சிறந்த புள்ளிகளை பெற்றுள்ள இவ்வகை விமானங்கள் உலகில் 50ற்கும் அதிகமான விமான சேவை நிறுவனங்களால் இயக்கப்படுகிறது.
இந்தோனாசியாவின் lion air ( 47 )
இந்தியாவின் indigo ( 45 )
பிரேசிலின் Azul airlines ( 39 )
நியுசிலாந்தின் air new Zealand ( 29 ) ஆகியன இவ் விமானங்களை இயக்கும் முதன்மை நிறுவனங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here