தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதிக்கு குறித்த லொத்தர் சீட்டை தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் டி பெரேரா வழங்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.