பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் பதவிவிலகல் தொடர்பில் மனோ எம்.பி விளக்கம்

0
467

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் வயது மூப்பின் காரணமாக பொது செயலாளர் பதவியிலிருந்து சுயமாக விலகியுள்ளார் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் தனது பதவியில் இருந்து விலகியதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ எம்.பியிடம் நியூஸ் இன் லங்கா இணையத்தளத்திற்காக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைபேறு மற்றும் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்துள்ள சாப்டர் அவர்களின் இடை விலகலை நாம் கனத்த இதயத்துடன் புரிந்துக்கொள்கின்றோம்.

கூட்டணியின் அரசியல் குழு விரைவில் கூடி, கூட்டணி யாப்பிற்கு இணங்க புதிய பொது செயலாளரை தெரிவு செய்யும் என கூட்டணி தலைவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here