கார்கில்ஸ் அங்காடியொன்றில் (Supper Market) பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஹன்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சம்பவம் பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. விற்பனை நிலையத்திலிருந்து பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்தே, வாடிக்கையாளரை கொடூரமாக தாக்குவது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

முந்தைய செய்தி

உள்ளாடையுடன் நின்ற வாடிக்கையாளர் : மன்னிப்புக்கோரியது கார்கில்ஸ்