புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில், ‘ஹோப் கேட்’ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகையில், ‘ஹோப் கேட்’ ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வரை தனிப்பட்ட உதவிகளை வழங்கும்.

பிரத்யேக வாடிக்கையாளர் சேவை குழுவினால் தனிப்பட்ட உதவி வழங்கப்படும.. ‘இனி துன்புறுத்தல்கள் இல்லை,’ என்று அவர் ஒரு விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.