விமானாமொன்று இன்று காலை விபத்துக்குள்ளானதில் 57 பயணிகளும், 4 விமான பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசில் – சவோபவ்ரோ பகுதியில் பயணிகள் விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானமானது, குறித்த பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியிருப்பு பகுதியிலிருந்து எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்டவில்லையென்றும் தெரிவிக்க்கப்படுகின்றது.