வேலைபெற்று தருவதாக 12 வயது மாணவனிடம் 15ஆயிரம் மோசடி

0
294

நானுஓய டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17ஆம் தி கதி வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக கூறப்பட்ட 12 வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவன் நேற்று 19ஆம் திகதி நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கபட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனை அயல் வீட்டில் உள்ள நபர் ஒருவர் தொழில்பெற்று தருவதாகவும் ஆகையால் வீட்டில் இருந்து 15ஆயிரம் ரூபா பணம் எடுத்து வருமாறு கூறிய நபர் அந்த சிறுவனிடம் இருந்து பத்தாயிரம் ருபாய் பணத்தை பெற்று கொண்டு சிறுவனை நானுஓய புகையிரத நிலையத்திற்கு அழைத்து சென்று பயணச்சீட்டினை பெற்று கொடுத்து நீர் கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனை நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் அடையாளம் கண் உறவினர் ஒருவரே சிறுவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். கானாமல் போன சிறுவன் நீர்கொழும்பு பகுதியில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக நானுஒய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சிறுவனை நீர்கொழும்பிற்கு அனுப்பி வைத்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நானுஓய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ – எஸ் .சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here