ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- நாவலப்பிட்டி தொகுதி மாநாடு – 2022

0
351

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாவலப்பிட்டி தொகுதி மாநாடு 2022 ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாவலப்பிட்டியில் நடைபெறவுள்ளது.

கோறளை பிரதேச சபையின் 15 அங்கத்தவர்களது தொகுதிகளிலும் மகிந்தானந்த அலுத்கமகே அமைச்சரின் தலையீட்டின் கீழ் அது தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கும் பூர்வாங்க கூட்டத் தொடர் (09) நடைபெற்றது.

இக் கூட்டத் தொடரில் கங்கை-இஹல கோராலய பிரதேச சபையின் தலைவர் தம்மிக்க நதீர ஜயசேகர தலைமையில் அனைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

நேற்று நடைபெற்ற 15 கூட்டங்களும் அந்தந்த பகுதிகளின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here