ஹட்டன் – கொழும்பு வீதியில கனரக பெப்ஸி வாகனம் விபத்து : சாரதி வைத்தியசாலையில்

0
335

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கடவளை பகுதியில் கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 20அடி பள்ளத்தில் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் சாரதி காயங்களுக்கு உள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பெப்சி போத்தல்களை ஏற்றிவந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here