இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மலையகப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. ஆறுகளும் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இப்பகுதியில் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நானுஓயா நிருபர்