அக்கரப்பத்தனை பிரதேச அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் !.

0
293
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச அபிவிருத்தி குறைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி குறைப்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
என அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன் நுவரெலியா மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் (28.11.2022)அன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில்  நடைபெற்றது.
 இக் கூட்டத்தில் கலந்து கொண்ட
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன்
அக்கரபத்தனை பிரதேசத்தில் நிலவுகின்ற பின் தங்கியுள்ள அபிவிருத்திகளினால் பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக மூன்று வைத்தியசாலைகளை உல்லடக்கிய அக்கரப்பத்தனை பிரதேசத்தில் மரணபரிசோதகர் ஒருவர்  இல்லை,அதேபோல திருமண பதிவாளரும் இல்லை.இதனால் பிரதேச மக்கள் இறப்பு,பிறப்பு,திருமண ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்
என அதிகாரிகளின் கவனத்திற்கு சுட்டிக்காட்டினார்.
மேலும் டயகம-போடைஸ் பிரதான பாதை மற்றும் டயகம-லிந்துலை பிரதான பாதை தொடர்பில் தெரிவித்த அவர் பயணத்தை மேற்கொள்ள முடியாத அளவிற்கு குன்றும் குழியுமாக மாறிவிட்ட
இவ்வீதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும்,மக்களும் உயிர் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளமையினால் இவ்வீதகளின் குறைப்பாடுகளை சீர் செய்வதுடன் குறிப்பிட்ட இப் பிரதேசங்களில் பின் தங்கியுள்ள பொது அபிவிருத்திகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அதேபோல அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட மெராயா,எல்ஜின் மேல் பிரிவு செல்லும் பிரதான பாதை மண்சரிவு ஏற்பட்டு இப்பிரதேச தோட்ட மக்கள் போக்குவரத்தில் பாதித்துள்ளார்கள் இந்த நிலையில் இவ் வீதி போக்குவரத்தை சீர் செய்ய அதற்கான தீர்வுகளை உடன் தரும் படியும் வேண்டுகோளை அவர் முன்வைத்தார்.
மேலும் திஸ்பனை,மன்றாசி ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்களில் உள்ள கற்களை அகற்றி இம் மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கையை முன்வைத்தார்.
இவ் ஒருங்கிணைப்பு கழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், அரசியல் பொருப்பாளர் பி.இராஜதுரை முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி சக்திவேல் எ.பிலிப்குமார் உட்பட ,திணைக்கள அதிகாரிகள் பலரும்  கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here