அக்.2 இல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

0
181

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை நிகழ உள்ளது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன், சூரியனை முழுமையாக மறைக்கிறது. அதனால் மறைக்கப்பட்ட பகுதியை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுகிறது. அது பார்ப்பதற்கு நெருப்பினால் வளையம் அமைந்தது போன்று தோன்றும்.

பொதுவாக அமாவாசை நாட்களிலியே சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு மகாளய பட்ச நாட்களில் வரும் அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது..

இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி ஒக்டோபர் 2ஆம் திகதி இரவு 9.12 மணிக்கு தொடங்கி ஒக்டோபர் 3ஆம் திகதி நள்ளிரவு 3.17 மணியுடன் முடிவடைகிறது. நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண இயலும். வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல்,அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலையில் இவ்வருடத்தின் இரண்டாவதும் இறுதியுமான சூரிய கிரகணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here