அரசியல்வாதிகளிடையே முளைக்கும் புதிய  அண்ணன் தம்பி உறவுகளால் மக்களுக்கு பயனில்லை-  திலகர் 

0
345
  • மலையக கட்சிகளின் இணைவு என்பது இப்போதைய தலைமுறைக்கு புதிய விடயமாக இருந்தாலும், எனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்னர் இத்தகைய ஒற்றுமைகளை பல தடவைகள் பார்த்துள்ளேன்.1999 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் இ. தொ.கா.  2009 இல் அதே சங்கத்தின் தலைமையகத்தை அவர்கள் தாக்கியபோது, அதை நேரில் கண்டவன் நான். 99 இல் ஏற்பட்ட ஒற்றுமைக்கு 2009 இல் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும். எனவே விழாவுக்கு அழைத்து விருந்தினராக மாமன், மச்சான், தந்தை, மகன் என உறவு கொண்டாடாடுவதால் மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. மக்களுக்காக அனிப்படையில் ஒரு வேலைத்திட்டம் முன்வைக்கப்படல்  வேண்டும் என மலையக அரசில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைபபாளரும்,முன்னாள் நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

அட்டனில் (06.11.2022 அன்று)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்களின அடையாளம் கருதி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளது.” –

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1999 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்திய வம்வாவளி மக்கள் பேரணி என பெயரும் இடப்பட்டது. தற்போதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கூட அந்த சின்னத்தில்தான் போட்டியிட்டுதான் அரசியல் அறிமுகம் பெற்றார். 2009 ம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை இ.தொ.கா அடித்து நொறுங்கியது.

2001 ஆம் ஆண்டு மல்லியப்பு சந்தியில் ஆறுமுகன் தொண்டமானும், சந்திரசேகரனும் ஒன்றிணைந்தார்கள். இரு துருவங்கள் இணைவு என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தற்போது 2022 இல் இணைவு நடைபெறும்போது தற்போதைய மலையக மக்கள் முன்னணியில் தலைவர் எப்படியான கருத்தை வெளியிட்டு வருகின்றார் என்பது மக்களுக்கு புரியும்.

எனவே இப்போது எழுந்துள்ள ஒற்றுமை எவ்வளவு காலத்துக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த திடீர் அண்ணன் -தம்பி, தந்தை – மகன் உறவுகளால் மக்களுக்கு ஒன்றும் நன்மை ஏற்படப்போவதில்லை. ஆனால் இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் இது நல்லது. இவர்களுக்காக இனி அவர்கள் வீதியில் சண்டைச் சச்சரவில் ஈடுபடத் தேவையிருக்காது. வழக்கு வரம்புக்கு போக வேண்டிய தேவையும் வராது.

இந்த ஒற்றுமை மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் 1000 ரூபா விடயத்தில் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்த இரண்டு தரப்பும் இணைந்து அதனைப் பெற்றுக் கொடுக்க முனைப்பு காட்டலாம்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே மலையக அரசியல் அரங்கத்தின் இலக்காகும். எனவே, ஆயிரம் ரூபா எனக் கூவிக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. இணைந்து செயற்படுபவர்கள் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் போட்டியிடும். உள்ளாட்சி, மாகாண மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும். ஏன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால்கூட அடையாளம் கருதி களமிறங்குவோம். வெற்றி, தோல்வியைவிட எமது மக்களின் அடையாளத்துக்காக போட்டியிடலாம். இளைஞர், யுவதிகளுடன் கைகோர்த்து அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here