மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீர சிங்க, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று நம்புவ தாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷூமார சிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கி யின் ஆளுநரிடம் இவ்வாறான திட்டம் இருப்பதாகவும் அதற்கான பிரசார வேலைத்திட்டத்தை அவர் ஏற்கனவே தொடங்கியுள்ளார் எனவும் அவர் கூறினார். சுயாதீன தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும் ‘துலாவ‘ அரசியல் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக் கும்போதே அவர் இதனைக் கூறினார்.