ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில்
தபால் ஊழியர்கள் இன்றும் (08) நாளையும் (09) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர் இதற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (08) நானுஓயா பிரதான தபாலக ஊழியர்களும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நானுஓயா பிரதான தபால் நிலையத்தில் கடிதங்கள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றது.
இருந்தும் குறித்த தபால் நிலையத்தில் 25 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழில் புரிந்துவரும் நிலையில் இன்றைய தினம் இரண்டு ஊழியர்கள் மாத்திரம் தொழிலுக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடிதம் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான கடிதங்கள் நானுஓயா பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயா நிருபர்