பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பயணிகள் இரயில் தண்டவாளத்திலிருந்து பாய்ந்து தடம்புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்டன் ரயில் நிலையத்திற்கும் ரொசல்ல பகுதிக்கும் இடையிலான 105 வது மைல்கல் பகுதியிலேயே இன்று மாலை 4.45 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
குறித்த இரயிலின் பார்வையாளர் பெட்டியின் சில்லுகளே தடம்புரண்டுள்ள நிலையிலே குறித்த பெட்டியை அகற்றி விட்டு ரயில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.எனினும் தடம்புரண்ட ரயில் பெட்டி இதுவரையில் அகற்றப்படவில்லை என்றும் அகற்றுவத்தற்கான நடவடிக்கையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.