அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட, பிரதான வீதியில் ரித்திஸ் ஆடையகத்துக்கு அருகாமையில் உள்ள பழமையான கட்டத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு கலைந்தமையில் அட்டன் நகர்ப்பகுதியில் சுமார் 4 மணித்தியாலம் நேற்று பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட குறித்த பழமையான கட்டத்தில் நீண்ட நாட்களாக குளவி கூடு கட்டப்பட்டிருந்துள்ளது. இந்த குளவி கூட்டை நீக்குவது தொடர்பில் தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டாதிருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று திடீரென கலைந்த குளவி கூடு அங்குள்ள மக்களை கொட்டியுள்ளது. சிலவற்றை வீடியோவில் காணலாம். இதனையடுத்து, பொதுமக்களை காப்பாற்றுவதற்காக குறித்த பகுதியில் இருந்த தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்கள் தீயணைப்பு கருவியின் ஊடாக விரட்ட முற்பட்டுள்ளனர்.
எனினும் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் ஏற்கனவே அட்டன் – டிக்கோயா நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனியாவது அட்டன் -டிக்கோயா நகர சபை கவனத்தில் எடுக்குமா?
தகவல் – வீடியோ- பொதுமக்கள்