அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பிளாக்பூல் சந்திக்கு அருகில் கெப் ரக வண்டியொன்று வீதியை விட்டு விலகி இன்று (27) காலை 6.00 மணியளவில் வீதியின் ஓரத்தில் இருந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தின் போது இரண்டு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.