அட்டன் – நோட்டன் பிரதான வீதியின் வனராஜா பகுதியில் இரு முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளதில் ஒரு காயமுற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் டிக்கோயாவிலிருந்து காசல்ரி பகுதியை நோக்கி சென்ற முச்சக்ரவண்டியும் சவுத்வனராஜா பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நோருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்துக்கான காரணம்என தெரிவித்த பொலிஸார் விபத்துக்குள்ளான இரு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா