அட்டன், மஸ்கெலியா, கொட்டகலை ஆகிய இடங்களில் உள்ள மதுபானசாலைகளை உடைத்து மதுபான போத்தல்களை திருடிய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட மதுபான போத்தல்களுடன் விற்பனை செய்த இரண்டு பெண்களும் அவர்களுள் அடங்குவர்.
அட்டன், மஸ்கெலியா , கொட்டகலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மதுபானசாலைகளை உடைத்து மதுபான போத்தல்களை திருடிய பிரதான சந்தேகநபரை திம்புல, ஹட்டன் ஆகிய பொலிஸ் பிரிவில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் உள்ள மதுபானசாலையொன்றை உடைத்து மதுபான போத்தல்களை திருடிய குற்றச்சாட்டில் அட்டன், அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் திம்புல பத்தனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அட்டன் பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் சி.சி.டி.வி. காட்சிகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையடுத்து அட்டன் பொலிஸார் குறித்த மதுபான சாலைகளில் இருந்து திருடப்பட்டதாக 41 மதுபான போத்தல்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் திருடப்பட்ட மதுபான போத்தல்களை ஹட்டன் அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் இரு பெண்களிடம் விற்பனைக்காக வழங்கியதுடன், சந்தேகநபர்கள் இருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் குறித்த பெண்களையும் கைதுசெய்துள்ளனர்.