அட்டன் ஸ்ரீ கிருஷ்ணா நடன பாடசாலையின் சலங்கை பூஜையும் கலை விழாவும்

0
460

ஸ்ரீ கிருஷ்ணா நடன பாடசாலையின் சலங்கை பூஜையும் கலை விழாவும் கடந்த 23.03.2025 அன்று ஹட்டன் D.K.W கலாச்சார மண்டபத்தில் ஸ்ரீ கிருஷ்ணா நடன பாடசாலை இயக்குனர் திருமதி சித்திரப்பிரியா ருஷாந்த் அவர்களின்  நெறியாள்கையில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் 120 மாணவர்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி 20 நடனங்களை மேடையேற்றினர்.

குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் முன்னாள் ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி ஸ்ரீமதி ஷாமினி இராஜதுரையும் , ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர்  R. விஜேந்திரன் ,முன்னாள் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர்  ஸ்ரீதர்,  இளைஞர் சேவைகள் மன்ற இசைத்துறை விரிவுரையாளர்   A.ரொபின்சன் ,மற்றும் taian lanka முகாமைத்துவ பணிப்பாளர் DR.A.பத்மநாதன் அவர்களுடன் ஹட்டன் வலய உதவி கல்வி பணிபாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெரும் மதிப்புக்குரிய பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் ,பழை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது பாத பூஜை, சலங்கை பூஜையுடன் ஆரம்பித்து சிறப்பான கலை நிகழ்வுகளுடன் கலைக்கட்டியது .

மேலும் சிறப்பு நிகழ்வாக சிகரம் கிரியேஷன்ஸ் பாடல் ஆக்கத்தில் தசாவதாரம் மேடையை பிரம்மிக்க செய்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here