அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத கட்டுரைப்போட்டி -2022

0
440

2022ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” என்ற இவ்வருடத்திற்கான தொனிப்பொருளுக்கு அமைவாக அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் நூலகக் கற்றல் வள நிலையத்தால் மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கட்டுரைக்கான தலைப்புகள்

1. மாணவர்களின் ஆளுமை விருத்தியில் நூல்களின் முக்கியத்துவம்.

2. நிகழ்கால பாடசாலை நூலகங்களும் மாணவர்களின் எதிர்ப்பார்ப்பும்.

3. “அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி” – சவால்களும் சாத்தியங்களும்.

4. மாணவர்களின் தகவல் தேவைகளும் தற்காலத்தில் அதற்கான வாய்ப்புக்களும்.
போட்டிக்கான விதிகள்
இது தேசிய மட்ட போட்டியாகவும் திறந்த போட்டியாகவும் அமையும் போட்டியாளர் இலங்கை அரச பாடசாலை ஒன்றில் நடப்பு வருடத்தில் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

• முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசில்களும் முதல் பதினைந்து (15)
வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

• புள்ளி வழங்கும்போது தேடல், ஆய்வுப்பார்வை முதலியன கருத்திற்கொள்ளப்படும்.

• கொடுக்கப்பட்ட நான்கு தலைப்புகளில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். ஆக்கம் நியமத்தமிழில் அமைவதோடு கையெழுத்து அல்லது கணினி பதிப்பாக அமையலாம். கட்டுரையாக்கம் ஐந்நூறு தொடக்கம் அறுநூறு (500-–600) சொற்களுக்குள் அமைய வேண்டும்.

• போட்டியாளரின் சொந்த ஆக்கமாக அமைவது அவசியம். ஆக்கங்கள் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

• முடிவுத் திகதிக்கு (2022-.10-.25) முன்பதாக தபாலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

தபால் உறையில் வாசிப்பு மாத கட்டுரைப்போட்டி – 2022 என தலைப்பிடல் வேண்டும்.

• ஆக்கத்தின்; முதல் பக்கத்தில் பாடசாலையின் முகவரி, மாணவரின் முழுப்பெயர், கற்கும் தரம் தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கங்கள், முதலியன தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.

விதிகளைப் பின்பற்றாத ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.

நடுவர் குழுவினுடைய தீர்ப்பே இறுதியானதாக அமையும்.

• ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

நூலகப் பொறுப்பாசிரியர், ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி
அட்டன்.

தொடர்புகளுக்கு :- 0718396796, 0778914366

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here