அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட அறிக்கை
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் தீர்மானத்தின்படி, அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி சேவையின் முதலாம் தர அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
அதற்கிணங்க கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர, அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விசேட அறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறு விண்ணப்பங்களை கோருவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள், பாடசாலை ஆவணங்கள், புள்ளி விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்கள் கடந்த 11 ஆம் திகதி கல்வியமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் மூலம் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி டிசம்பர் 31 என்றும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.