கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் கண்டனம் வெளியிட்டிருந்ததோடு, குறித்த சட்டத்தின் கீழ் அவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தன.
அந்த வகையில் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி மூலம் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் படி, கொழும்பிலுள்ள பின்வரும் பிரதேசங்கள் மற்றும் வளாகங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
- பாராளுமன்றம்
- உயர், மேல், நீதவான் நீதிமன்றங்கள்
- சட்ட மா அதிபர் திணைக்களம்
- ஜனாதிபதி செயலகம்
- ஜனாதிபதி மாளிகை
- கடற்படை தலைமையகம்
- பொலிஸ் தலைமையகம்
- பாதுகாப்பு அமைச்சு
- அக்குரேகொட இராணுவத் தலைமையகம்
- விமானப்படை தலைமையகம்
- பிரதமர் அலுவலகம்
- அலரி மாளிகை
- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள்