அத்தியாவசிய உணவுப் பொருள்களை சேமித்து வையுங்கள்

0
299

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை. அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும். இந்த நிலையில் நாட்டு மக்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை சேமித்து வைக்கவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

300 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 300 பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது .

‘மக்களின் பசியையாவது போக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான், நான் கடந்த மே மாதம் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன். அதன் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி தெரிவில், நான் போட்டியிட்டேன்.

மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியிருக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் ஜனாதிபதியாகத் தெரிவாகினேன். எனினும், மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில்தான் இந்த அதி உயர் பதவியில் இருக்கிறேன்.

பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் முதலில் தீர்வு காண்பேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here