அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு

0
283

அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், ஊடக சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும், நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும், சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here