அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவிற்கும் ஒரு கிலோ பருப்பு 25 ரூபா குறைக்கப்பட்டு 460 ரூபாவுக்கும், ஒரு கிலோ நெத்தலி 25 ரூபா குறைக்கப்பட்டு 1375 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 198 ரூபாவிற்கும் சிவப்பு சீனியும் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 310 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.