அத்துமீறிய வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை முறியடிப்பு

0
109

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை அத்துமீறிய வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

நேற்று தொடக்கம் ஒரு குழுவினர் குறித்த பகுதியில் பாதுகாப்பு கமராக்களை பூட்டி அப்பகுதியில் வேலிகள் இடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தனர்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது குறித்த இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அங்கு காணிகளை அடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் பாதுகாப்பு கமராக்கல் அகற்றப்பட்டு மாநகரசபையின் வாகனங்களில் ஏற்றப்பட்டு மாநகரசபைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியானது மட்டக்களப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகளின்போது வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான பிரதான பகுதியாக காணப்படுவதுடன் அது அடைக்கப்படுமானால் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதிகளில் அரச தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் திட்டமிட்டு சிலர் அத்துமீறி கானிகளை அடைப்பது. அரச அதிகாரிகளை அச்சுறுத்தி பொதுமக்களை பயமுறுத்தி நீதிமன்றத்தின் ஊடாக தமது காணியென பொய் ஆவணங்களை சமர்ப்பித்து அபாகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அத்து மீறி குடியேறிய அவர்களின் தளவாடங்கள் கழற்றப்பட்டு அவை மாநகர சபை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளைப் பயமுறுத்தி இவ்வாறான சட்டத்தினை மீறிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.என ராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் இங்கு கருத்து தெரிவித்தார்

இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்காக பயன்படுத்தப்பட உள்ள அரச காணிகளை எவராலும் கள்ள உறுதிகள் முடித்து அவற்றை பயன்படுத்த முடியாது காணியை பிரதேச செயலாளர் அரசாங்க காணி என உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பிரதேசத்தின் இக்காணியின் பெறுமதி. அறிந்து இவர்கள் இதனை சட்டவிரதோமாக கைப்பற்றியுள்ளனர். யாராக இருந்தாலும் அரச காணிகளை கைப்பற்ற இடம் அளிக்க முடியாது என மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இங்கு கருத்து தெரிவித்தார்

பொதுமக்களின் அரச காணிகளை அரசியல் பேதங்களை மறந்து மட்டு நகரில் காப்பாற்ற ஒன்றாக செயற்பட்ட சம்பவம் இன்று காலை மற்றும் நகரில் பதிவாகியது சம்பவ இடத்திற்கு வந்தபாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்னாள் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மட்டுமாநகர சபையின் ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும் ஒன்றிணைந்த முயற்சியினால் மட்டக்களப்பு கல்லடி பாலத்து கருகில் உள்ள அரசகானியை கைப்பற்று முயற்சி தடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளருக்கு காணியை பாதுகாக்கும் உத்தரவினை போலீசாரின் உதவியுடன் மேற்கொள்ளுமாறு ராஜாங்க அமைச்சர் இங்கு பணிபுரி விடுத்தார் இதனைக் கைப்பற்றியவர்கள் இங்கு சட்டவிரோத மது பாவனையில் ஈடுபட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here