அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே எமது நாட்டின் வெற்றி தங்கியுள்ளது

0
109

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம் செழிப்படைந்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்பட முஸ்லிம் மக்கள் இந்நாளில் பிராத்திக்க வேண்டும். பல்லின மக்கள் வாழும் இலங்கை திருநாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே எமது நாட்டின் வெற்றி தங்கியுள்ளது.

எனவே அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சகோதர வாஞ்சையுடன் வாழ பிராத்திப்போம்.

நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் இலங்கை உட்பட உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹஜ் பெருநாள் நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தி நிற்கிறது. இவர்களின் தியாக வாழ்க்கையில் பல படிப்பினைகள் எமக்கு இருக்கின்றன. எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொறுமை மற்றும் தியாகம் மிகவும் முக்கியமானவையாகும்.

கடந்த காலங்களில் எமது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார கஷ்டங்களின்போது எமது மக்கள் மிகவும் பொறுமையோடும் தியாகத்தோடும் செயற்பட்டதன் காரணமாக தற்போது அந்த கஷ்ட நிலைமைகளில் இருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here