வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷின் டாக்காவில் இடம்பெற்று வரும் இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA) மாநாட்டின் போது இச்சந்தர்ப்பு இடம் பெற்றுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்கனவே நிலவும் சிறந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.