அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார் விஜித

0
96
Minister - NPP Candidate- Mp-Member of Srilanka Parliament

2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 7 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் மக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திற்கு மூன்று அமைச்சுக்கள் இன்று (18) வழங்கப்பட்டதுடன், அந்த அமைச்சுக்களுக்கான கடமைகளை இன்றே அமைச்சர் விஜித ஹேரத் பொறுப்பேற்றுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத்,   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில், எளிமையானதொரு வைபவத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரியான அமைச்சர் ஹேரத், முன்னைய கலாசார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளதுடன், நடைபெற்ற தேர்தலுக்கு முன்னரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here