அரசியல் தீர்வு கோரி 100 நாட்கள் செயல்முனைவின் 13 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம்

0
317

‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 13 நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா  அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பகல் 11 மணிக்கு புல்லுமலை தேவாலய சந்தியில் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஓன்றுதிரண்ட மக்கள் நாங்கள் சுதந்திரமாக வாழ உரிமைவேண்டும்,  நாங்கள் நாட்டை துண்டாடவே தனி அரசை  கேட்கவில்லை, இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கின்றோம்.

யுத்த்தால் பாதிக்கப்பட்ட  வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய  அரசியல் தீர்வு வேண்டும், காணாமல் போனவர்களுக்கு தீர்வு வேண்டும். பேச்சு சுதந்திரம் வேண்டும் நாங்கள் எங்கள் உரிமையை கேட்கின்றோம்.

எனும் சுலோகங்கள் ஏந்தியவாறு  கோஷங்கள் எழுப்பியவாறு போரட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தங்கள் கோரிக்கையடங்கிய மகஜரை ஊடகங்கள் ஊடாக வெளிகொண்டுவருமாறு ஊடகவியலாளர்களிடம் மகஜரை கையளித்த பின்னர் போராட்டகாரர்கள்  அங்கிருந்து வெளியேறினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here