அரச அச்சகத்திற்கு இன்று (29) முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்தும் ஆவணங்களும் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
இதனால், அரச அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனியான பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி திருமதி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.