அலி சஃப்ரியின் சகோதரருக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

0
343

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கொழும்பு தெரியவருகிறது.

புதிய தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியில் இருந்து விலகினார்.

மொஹமட் உவைஸ் முன்னாள் நிதியமைச்சர் அலி சஃப்ரியின் சகோதரர் எனவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here