கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்தே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இலேசான காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகள் காரணமாக அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சோனியா காந்திக்கு உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார்.