போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது
ஓகஸ்ட் 15, 2022 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகள் நடைபெறுவது தொடர்பாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளனர்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் 2022.08.15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வாரத்தின் 5 நாட்களும் வழமை போன்று 7.30 தொடக்கம் 1.30 வரை நடைபெறும்.
போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள பிரதேச அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தொடர்பில் பொருத்தமான போக்குவரத்து நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
2022.08.15 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளை ஆரம்பிக்கும் சந்தரப்பத்திலும் போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொருத்தமான சலுகைகளை அதிபர்கள் வழங்க வேண்டும் என்பதுடன், அது வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவர்.
எதிர்வரும் மாதங்களில் பாடசாலை நேரங்களை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் பாட இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடசாலை நேரத்தின் பின்னர் மேற்கொள்வதுடன் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.