2021(22) உயர் தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களில் 35.12 வீத ஆண் மாணவர்களும், 64.88 வீத மாணவிகளும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்பிள்ளைகளின் பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து பரவலாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டும் ஆண் மாண வரின் கல்வியில் பாரிய தாக்கத்தை சமகாலத்தில் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் பாவனை அடுத்ததாக செல்வாக்கு செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆண்கள் பாடசாலைகளின் பெறுபேறுகள், பெண்கள் பாடசாலைகளை விட மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஆண்கள் பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது.
தற்போது அரச ஊழியர்களில் கணிசமானோர் பெண்களாக இருப்பதோடு, ஆசிரியர் சேவையில் ஏறத்தாழ 74.4 வீதம் பெண்களாகவும், 26.6 வீதம் ஆண்களாகவும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.