சர்வதேச பிரிந்த ஆன்மாக்கள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் (லங்கா) அமைப்பின் ஏற்பாட்டில் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொழும்பு சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலை கட்டடத்தில் செவ்வாய் கிழமை (25) காலை இடம்பெற்றது.
மனித உரிமைகள் (லங்கா) அமைப்பின் தலைவர் என்.எம்.என். அஷீம் தலைமையில் இந்த நிகழ்வு “கருவறை முதல் கல்லறை வரை மனிதனுக்கு சேவை செய்வதே மனிதனின் இறுதிக் கடமையாகும்” எனும் தொணியில் இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கை மன்ற கல்லூரியில் வரவேற்ப்பு நிகழ்வுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள்,உட்பட அமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலருக்கு அங்கத்துவ அடையாள அட்டை அணிவிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் மதகுருமார்கள் உள்ளிட்ட பிரபல அதிதிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
அதேநேரத்தில் இரவு பகல் பார்க்காது எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் செய்திகளை சேகரித்து அதனை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கும் ஊடக துறையினருக்கு உட்சாகமூட்டும் வகையில் இந் நிகழ்வில் தெளியூட்டப்பட்டது.
மேலும் முக்கியமாக இலங்கையில் ஊடகவியலளர்களை மிக பிரம்மாண்டமான முறையில் கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ள தகவலும் இதன் போது அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஆ.ரமேஸ்