ஆறு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

0
181

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 644,186 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

20 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள்   வருகைத்தந்துள்ளதாகவும் இந்தியாவில் இருந்து மாத்திரம் 106,500 பேர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

இந்த வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும் 74,713 ரஷ்ய பிரஜைகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here